முன்சன் செல்லப்பிள்ளையார் ஆலயம் என்பது ஜேர்மனி முன்சன் தமிழ் இந்து மன்றத்தினால் நிர்வகிக்கப்படும் ஓர் இந்து கணேஷா ஆலயம் ஆகும். எமது ஆலயத்தில் நாள்தோறும் பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் விஷேட தினங்களிலும் வைபவங்களிலும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. அடியார்கள் உங்களுக்கு தேவையான பூஜைகளையோ பெட்டிப்பூஜைகளையோ முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வீடுகளில் நடைபெறும் பூஜைக்கோ வைபவங்களுக்கோ எம்முடன் தொடர்புகொண்டு ஒழுங்கு செய்துகொள்ளலாம்.